இந்திய நாணயங்களின் குறிப்புகளை அறிந்து கொள்ளுங்கள்
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நாணயமும் பல்வேறு நாணய சாலைகளின் மூலம் அச்சிடப்படுகின்றன, நாணயத்தின் தோற்றத்தை அடையாளம் காண ஒரு தனித்துவமான சின்னமாக நாணய குறியீடுகள் உள்ளது.
கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில், இந்தியா நாணயங்களின் பற்றாக்குறையை எதிர்கொண்டது. நாட்டில் நாணய தேவையை பூர்த்தி செய்ய அரசாங்கம் வெளிநாட்டு நாணய சாலைகளில் நாடியது, இருப்பினும், இந்தியா தன் தனி திறமைகளை கொண்டு புதிய நாணய சாலைகளை உருவாக்கியது .
இந்தியாவில் அச்சிடப்பட்ட நாணயங்களின் குறியீடுகள்
கொல்கத்தா நாணய சாலை
1757 இல் நிறுவப்பட்டது
நாணய குறியீடு: நாணய குறியீடு இல்லை
மும்பை நாணய சாலை
1829 இல் நிறுவப்பட்டது
நாணய குறியீடு:
வைர வடிவம் - சாதாரண நாணயங்கள்
B - பம்பாயைக்( Bombay) குறிக்கிறது (ஆதாரம் நாணயங்களில் 1995 வரை)
M - மும்பையை குறிக்கிறது (1995 க்கு பிறகு ஆதார நாணயங்களில்)
U - புழக்கத்தில் இல்லாத சிறப்பு நாணயங்களைக் குறிக்கிறது.
ஹைதராபாத் நாணய சாலை
1803 இல் நிறுவப்பட்டது
நாணய குறியீடு :
வைரத்தின் உள் பிளவு - 1953 - 1960 க்கு இடையில்
வைரத்தின் உள் புள்ளி - 1960 & 1968 க்கு இடையில்
நட்சத்திரம் - 1968 முதல். (ஆண்டு எண்ணிற்குக் கீழே மையத்தில்)
நொய்டா நாணயச் சாலை
1988 இல் நிறுவப்பட்டது
நாணய சாலை: புள்ளி
